காவல் நிலையத்தில் பெண் போலீஸ் முன் நிர்வாண நடனம் ! சாதா சிறையை கொரில்லா சிறையாக மாற்றிய கைதி !

காவல் நிலையத்தில் பெண் போலீஸ் முன் நிர்வாண நடனம் ! சாதா சிறையை கொரில்லா சிறையாக மாற்றிய கைதி !

Update: 2021-09-13 07:30 GMT

லாக் அப்பில் அடைக்கப்பட்ட நபர்  அங்கு பணியில் இருந்த பெண் காவலரிடம் ஆபாசமாக நடந்துகொண்டதை சக போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள தலோதரா பகுதியில் சுரேஷ் நந்த்வானி (55), என்பவர் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் பொது இடத்தில் அடாவடி செயல்களில் ஈடுபட்டதாக காவல்நிலையத்துக்கு புகார் வந்தது. 

இதையடுத்து அங்கு சென்ற காவலர்கள் அவரை, தடுத்து நிறுத்த முற்பட்ட போது அந்த நபர் போலீசாரையும் தாக்க முற்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் அவரை கைது செய்து சலபத்புரா காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை லாக் அப்பில் அடைத்து வைத்தனர்.

லாக் அப்பில் அந்த நபர் தொடர்ந்து கத்திக்கொண்டு இருந்துள்ளார். அங்கு பணியில் இருந்த போலீசாருக்கு தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் சுரேஷை அமைதியாக இருக்குமாறு சத்தம்போட்டுள்ளார். 

ஆனால், சுரேஷ் திடீரென தனது ஆடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாகியிருக்கிறார். மேலும் காவல்நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசாரை பார்த்து ஆபாசமாக பேசியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சுரேஷிடம் ஆடைகளை போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவற்றை கண்டுகொள்ளாத சுரேஷ், தனது செயலை தொடர்ந்து கொண்டிருந்தார்.

 

இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார், லாக் அப்பிற்குள் நுழைந்து 2 தட்டுதட்டி அந்த நபரை கட்டாயப்படுத்தி உடைகளை போட்டுக்கொள்ளச் செய்தனர். பின்னர் பெண் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக சுரேஷ் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்து அதன்கீழும் கைது செய்தனர்.  

newstm.in

Tags:    

Similar News