குழந்தைகளுக்கு சத்து தரும் நட்ஸ் லட்டு!!

தினசரி மாலை நேர ஸ்நாக்சாக சிப்ஸ், பொரியல், பட்சணங்கள் என குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு மாற்றாக நட்ஸ் லட்டு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். அத்தோடு அவர்களது ஆரோக்கியமும் மேம்படும். முந்திரி பருப்பு, பேரீச்சம் பழம் ஆகியவற்றை நெய்யில் வறுத்தெடுத்துக்கொள்ள வேண்டும். வேர்க்கடலை, எள், ரஸ்க், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்சியில்

Update: 2020-03-06 20:07 GMT

தினசரி மாலை நேர ஸ்நாக்சாக சிப்ஸ், பொரியல், பட்சணங்கள் என குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு மாற்றாக நட்ஸ் லட்டு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். அத்தோடு அவர்களது ஆரோக்கியமும் மேம்படும்.

தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை - அரை கப்
வறுத்த எள் - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - கால் கப்
ரஸ்க் - 4
பொடித்த வெல்லம் - 100 கிராம்
பேரீச்சம் பழம் - 4 (நறுக்கவும்)
முந்திரி பருப்பு - 4 (நறுக்கவும்)
உலர்திராட்சை - 4
டூட்டிபுரூட்டி - சிறிதளவு


செய்முறை:


முந்திரி பருப்பு, பேரீச்சம் பழம் ஆகியவற்றை நெய்யில் வறுத்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
வேர்க்கடலை, எள், ரஸ்க், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்சியில் போட்டு  பொடித்த பிறகு வெல்லத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றிக் கொள்ள  வேண்டும்.

அத்துடன்  நெய்யில் வறுத்தெடுத்த பேரீச்சம் பழம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, ரூட்டி புரூட்டி போன்றவற்றை ஒன்றாக சேர்த்து கிளறி விட வேண்டும்.

இவற்றை  சிறு சிறு உருண்டைகளாக பிடித்து குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தினம் ஒன்றாக சுவைக்க கொடுக்க உடல் ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

newstm.in

Tags:    

Similar News