ஜவுளித்துறை அமைச்சருக்கு ஒ.பன்னீர்செல்வம் கடிதம்..!!

ஜவுளித்துறை அமைச்சருக்கு ஒ.பன்னீர்செல்வம் கடிதம்..!!

Update: 2021-12-22 05:20 GMT

மூலப்பொருட்களின் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாடு முழுக்க போராட்டம் நடத்தப்பட்டது. இதன்படி கோவையிலும் பல்வேறு தொழிற்சங்கங்கள் தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டன. 

இந்நிலையில் ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இதுதான் விலைவாசி உயர்வை குறைக்கும். ஊழியர்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

விலை உயர்வு ஊழியர்களை மட்டும் பாதிக்காது. சிறு - குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும். குடும்பங்களையும் பாதிக்கும். கொரோனா பரவல் காரணமாக அவர்கள் இழப்பை சந்தித்துவிட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக ஜவுளித்துறை மிகுந்த இன்னல்களை சந்தித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


 

Similar News