நடிகர் அஜித்துக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்!
நடிகர் அஜித்துக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்!
தேர்தல் திருவிழாவையும் தாண்டி ‘தல’ அஜித் பெருமை தான் இணையதளங்களில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. சும்மாவே சலங்கை கட்டி ஆடும் நம் அரசியல் தலைவர்கள் இதை கண்டு கொள்ளாமல் இருப்பார்களா என்ன?
அரசியல் வட்டாரத்தில் இருந்து முதல் ஆளாய் வாழ்த்து சொல்லியிருக்கிறார் ஓபிஎஸ்.
தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்! pic.twitter.com/ZPfbY08uzJ
— O Panneerselvam (@OfficeOfOPS) March 8, 2021
யெஸ். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை அள்ளிய நடிகர் அஜித்குமாருக்கு தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து சொல்லி பதிவிட்டுள்ளார்.
அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்து வரும் அன்பு சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்! என்று ட்விட்டிருக்கிறார் ஓபிஎஸ்.
இனி, தேர்தல் நேரத்துல எதுக்கும் இருக்கட்டுமே என்று தல ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பவர்கள் வரிசையில் வந்து வாழ்த்தை பதிவு செய்வார்கள்?