நயன்தாரா நடித்த படத்தை ட்ரிபிள் மடங்கு விலை கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம்..!
நயன்தாரா நடித்த படத்தை ட்ரிபிள் மடங்கு விலை கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம்..!
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படம் மூன்று மடங்கு விலையில் பிரபல ஓடிடி நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ள விபரம் தற்போது தெரியவந்துள்ளது.
தென் கொரியாவில் வெளியான ‘பிளைண்டு’ என்கிற படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக தயாராகியுள்ளது ‘நெற்றிக்கண்’. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தனி ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ள படம் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நெற்றிக்கண் படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். அவள் படத்தை இயக்கி கவனமீர்த்த மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். கிரைம் த்ரில்லர் கதை பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா சூழலால் திட்டமிட்டபடி படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் தயாரிப்பு தரப்பு படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்தது. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை ரூ. 25 கோடி கொடுத்து பிரபல டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ. 20 கோடி வரை லாபம். மேலும் நயன்தாரா நடித்த படங்களில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட படம் என்கிற பெயர் நெற்றிக்கண் படத்திற்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் ஹீரோயின் படங்களுக்கு நயன்தாரா புதிய பட்ஜெட் விதிகளை வகுத்துள்ளார்.
தமிழக ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ‘நெற்றிக்கண்’ படம் வரும் ஜூலை 9-ம் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.