ஒலிம்பிக்: நீச்சல் குளத்தில் இருந்து 7 பதக்கங்களை அள்ளி சாதனை படைத்த ஆஸி. வீராங்கனை !!
ஒலிம்பிக்: நீச்சல் குளத்தில் இருந்து 7 பதக்கங்களை அள்ளி சாதனை படைத்த ஆஸி. வீராங்கனை !!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பதக்கங்களை அள்ளிவருகிறது. மேலும் ஒருசில வீரர், வீராங்கனைகள் சாதனைகள் படைத்து வருகின்றனர். அந்த வகையில் உலகம் முழுவதும் ரசிகர்களை கவந்துந்துள்ளார் ஆஸ்திரேலியா வீராங்கனை எம்மா மெக்கியான்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4x400மீ மெட்லே ரிலே நீச்சல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.60 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்றனர். அத்துடன் 2012ஆம் ஆண்டு அமெரிக்க வீராங்கனைகள் 3 நிமிடம் 52.05 வினாடிகளில் கடந்த ஒலிம்பிக் சாதனையை முறியடித்தனர்.
இந்த ஆஸ்திரேலிய அணியில் எம்மா மெக்கியான் இடம் பிடித்திருந்தார். இதில் தங்கப்பதக்கம் வென்றதுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்கு தங்கப்பதக்கம், 3 வெண்கலப் பதக்கம் என ஏழு பதக்கங்கள் வென்றுள்ளார்.
அதாவது, எம்மா மெக்கியான் 4x100மீ ஃப்ரீஸ்டைல் ரிலே, 100மீ பட்டர்ஃப்ளை, 100மீ பேக்ஸ்ட்ரோக், 4x200மீ ஃப்ரீஸ்டைல் ரிலே, 100மீ ஃப்ரீஸ்டைல், 200மீ பேக்ஸ்ட்ரோக், மிக்ஸ்டு 4x100மீ மிட்லே ரிலே ஆகியப் பிரிவில் பதக்கம் வென்றுள்ளார்.
இதற்கு முன் 1952ஆம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த கிறிஸ்டின் ஓட்டோ ஒரே ஒலிம்பிக்கில் ஆறு பதக்கங்கள் வென்றது சாதனையாக இருந்தது. அதை 2008ஆம் ஆண்டு அமெரிக்காவின் நடேலி காங்லின் ஆறு பதக்கங்கள் வென்று சமன் செய்திருந்தார். தற்போது எம்மா மெக்கியான் ஏழு பதக்கங்கள் பெற்று அவர்களது சாதனையை முறியடித்துள்ளார்.
⭐ RECORD BREAKER ⭐ (1/3)
— AUS Olympic Team (@AUSOlympicTeam) August 1, 2021
⚡ With the 7 medals at #Tokyo2020 and 4 at #Rio2016 @emma_mckeon has won the most Olympic medals (11) of any Australian Olympian (bettering the previous record of 9 held by @IanThorpe and @leisel_jones)#TokyoTogether #Swimming @DolphinsAUS pic.twitter.com/k4R0WPF8LZ
newstm.in