ஒலிம்பிக் மல்யுத்தம்.. விறுவிறுப்பான அரையிறுதியில் பஜ்ரங் புனியா ஏமாற்றம்- ஆனாலும் பதக்கத்திற்கு வாய்ப்பு !!
ஒலிம்பிக் மல்யுத்தம்.. விறுவிறுப்பான அரையிறுதியில் பஜ்ரங் புனியா ஏமாற்றம்- ஆனாலும் பதக்கத்திற்கு வாய்ப்பு !!
டோக்கியோ ஒலிம்பிக் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெறுங்கிவிட்டது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு பதக்கவேட்டை நடத்தி வருகிறது. இந்தியாவும் இதுவரை 2 வெள்ளி, 3 வெண்கலம் என பதக்கம் வென்றுள்ளது.
மேலும் அடுத்த சில பதக்கங்களுக்கு இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது. அந்தவகையில் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினார்.
பிற்பகல் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பஜ்ரங் புனியா, அஜர்பைஜான் வீரர் ஹாஜி அலியேவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அஜர்பைஜான் வீரர் ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளை பெற்றார். அவரது உடும்பு பிடியில் சிக்காமல் கடுமையாக போராடினார் பஜ்ரங் புனியா.
எனினும் இறுதியில் 5-12 என்ற புள்ளி கணக்கில் புனியா தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அளித்தார். அரையுறுதியில் தோற்றப்போதும் இந்தியாவுக்கு பதக்கத்திற்கான வாய்ப்பு உள்ளது. அரையிறுதியில் தோற்றதால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் அல்லது செனகல் வீரருடன் புனியா நாளை விளையாட உள்ளார்.
newstm.in