ஒலிம்பிக்.. இந்தியாவை 7- 1 என அபார ஆட்டத்தில் வென்றது ஆஸ்திரேலியா !!
ஒலிம்பிக்.. இந்தியாவை 7- 1 என அபார ஆட்டத்தில் வென்றது ஆஸ்திரேலியா !!
ஒலிம்பிக் தொடரில் இன்று ஆண்களுக்கான ஹாக்கி லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், ஏ பிரிவுக்கான இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடின.
போட்டி தொடங்கியது முதல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். அதாவது, ஆட்டத்தில் முதல் 26 நிமிடங்களுக்குள் 4 கோல்களை நெட்டுக்குள் அடித்தது ஆஸ்திரேலியா. அதன்பிறகு இந்தியா ஒரு கோலை அடித்தது. அதன்பின்னரும் ஆட்டத்தில் இந்தியாவில் மீண்டு வரமுடியவில்லை. இந்தியாவுக்காக தில்பிரீத் சிங் மட்டுமே கோல் அடித்திருந்தார்.
முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. குரூப் சுற்றில் டாப் 4 இடங்களை பிடிக்கின்ற அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். தற்போது இந்தியா குரூப் A-வில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-7 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்தியா தரப்பில் சிங் தில்பிரீத் 34வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆஸ்திரேலிய அணியில் கோவர்ஸ் இரண்டு கோல்களும், பிராண்ட், பெலிட்ஸ், ஓகில்வீ, ஹேவார்டு, பீல் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
newstm.in