தமிழ்நாட்டில் நுழைந்த ஒமைக்ரான்.. ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்!

தமிழ்நாட்டில் நுழைந்த ஒமைக்ரான்.. ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்!

Update: 2021-12-16 05:00 GMT

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நைஜீரியாவில் இருந்து வந்த நபரோடு தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கு புதிய வகை கொரோனா இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஒமைக்ரான் உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 7 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நைஜிரியாவில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று  கண்டறியப்பட்டது.  வெளிநாடுகளில் இருந்து 3 பேர் கொரோனா தொற்றுகளில் இருந்து மீண்டுள்ளனர்.” என்று கூறினார்.

கர்நாடகா, ஆந்திரா, கேரளா , தெலுங்கானாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 மாநிலங்களில் 69 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Similar News