தமிழகத்தில் ஒமைக்ரான்.. தயார் நிலையில் இருங்க: கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை கடிதம்..!
தமிழகத்தில் ஒமைக்ரான்.. தயார் நிலையில் இருங்க: கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை கடிதம்..!
சமீபத்தில், நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவருடைய மரபணுவில் எஸ்-ஜீன் மரபணு மாற்றம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த மரபணு மாதிரி பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில், ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள அவசர கடிதத்தில், “கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தவறியவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களையும் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், ஐசியூ படுக்கைகள் ஆகியவற்றின் இருப்பை மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும். மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.