கோவையில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி !
கோவையில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி !
லண்டனிலிருந்து கோவை விமான நிலையம் வந்த பயணிக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து கடந்த 20 ஆம் தேதி 69 வயது ஆண் ஒருவர் சென்னை வழியாக கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கூடுதல் பரிசோதனையில் எஸ் ஜீன் மரபணு மாற்றம் அதாவது ஒமைக்ரானுக்கு முந்தைய பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரின் சளி மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வு முடிவில் நேற்று, அந்த நபருக்கு ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அந்த நபருக்கு கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டுத் தனிமையில் இருந்த அவா், தற்போது கூடுதல் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'லண்டனிலிருந்து கோவை வந்த, 69 வயது ஆணுக்கு கடந்த, 20ஆம் தேதியன்று ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரின் சளி மாதிரிகளை சென்னைக்கு அனுப்பப்பட்டு பரிசோதனையில் ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா் ஏற்கெனவே இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியுள்ளார், என்றனர்.
newstm.in