ஒமைக்ரான் கட்டுப்பாடு – இது கட்டாயம் என அறிவிப்பு!!
ஒமைக்ரான் கட்டுப்பாடு – இது கட்டாயம் என அறிவிப்பு!!
கேரளாவில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கேரளாவில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளின் போது வெளிநாடுகளில் இருக்கும் கேரள மக்கள் ஊருக்கு வர வாய்ப்பு உள்ளது.
இதனால் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கேரள சுகாதார துறை கணித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நோய்தொற்றை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிகை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரியில் உள்ள தமிழக - கேரள எல்லை சோதனை சாவடியான களியக்காவிளை பகுதி உஷார் படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் எடுத்த பிறகு, அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்து கொண்ட சான்றிதழ் காண்பித்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
தடுப்பூசி போடாதவர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனை சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 10 வயதில் இருந்து 18 வரை ஆர்டிபிசி ஆர் சோதனை சான்று என கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தபட்டுள்ளது.
அப்படி ஆர்டிபிசியார் சான்று இல்லாமல் வருவோரை சோதனை சாவடி முகாமில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொண்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
முக கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் வருகிற 31,1,2ஆம் தேதிகளில் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in