ஒமைக்ரான் பரவல் – சென்னை வந்தது மத்தியக் குழு!!
ஒமைக்ரான் பரவல் – சென்னை வந்தது மத்தியக் குழு!!
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 4 போ் கொண்ட மத்திய மருத்துவக் குழுவினா் சென்னை வந்தடைந்தனர்.
ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. தற்போதுவரை 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 430க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள கேரளா, மகாராஷ்டிரா,தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்தும், பரவல் குறித்தும் ஆய்வு செய்வதற்காக மத்திய மருத்துவ குழு வல்லுநர்கள் டாக்டர் வனிதா,புர்பசா,சந்தோஷ் குமார்,தினேஷ் பாபு ஆகிய நான்கு போ் சென்னை வந்துள்ளனர்.
இவா்கள் தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து ஆய்வுகள் நடத்தவுள்ளனர். பின்னர், ஆய்வின் முடிவுகளை மத்திய சுகாதாரத்துறையிடம் இந்த குழு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in