புதுச்சேரியிலும் நுழைந்தது ஒமைக்ரான்.. 2 பேர் ஆஸ்பத்திரியில் அட்மிட்..!

புதுச்சேரியிலும் நுழைந்தது ஒமைக்ரான்.. 2 பேர் ஆஸ்பத்திரியில் அட்மிட்..!

Update: 2021-12-28 15:45 GMT

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் மற்ற நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று காலை  நிலவரப்படி, இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 186 பேர்  ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேரும், டில்லியில் 165 பேரும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் 49 பேரும், ராஜஸ்தானில் 46 பேரும், தெலுங்கானாவில் 55 பேரும், கர்நாடகாவில் 31 பேரும், கேரளாவில் 57 பேரும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் 34 பேர் ஒமைக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் 80 வயது முதியவர் மற்றும் 20 வயது இளைஞர் என இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News