முதியோருக்கு ஒரு லட்சம் ரூபாய்.. மத்திய அரசு சூப்பர் திட்டம்..!

முதியோருக்கு ஒரு லட்சம் ரூபாய்.. மத்திய அரசு சூப்பர் திட்டம்..!

Update: 2022-01-26 12:08 GMT

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்ற திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் வரை பென்ஷன் பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டம் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஓய்வு காலத்தில் முதியவர்களுக்கு இந்த திட்டமானது உறுதியான பென்சன் வழங்குகிறது. முதியோர் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் 2023 மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் நீங்கள் அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வரை சேமித்து கொள்ளலாம். அதிகபட்சம் 10 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். 10 ஆண்டு பாலிசி காலத்துக்குப் பின்பும் முதலீட்டாளர் உயிரோடு இருந்தால், கடைசி தவணை ஓய்வூதியத்துடன் முதலீடு செய்த தொகை அவருக்குத் திரும்பக் கிடைக்கும்.

அதே சமயம், பாலிசி காலத்தில் பாலிசிதாரர் இறந்து விட்டால், அவரது நாமினிக்கு முழு முதலீட்டுத் தொகையும் கிடைக்கும். மூன்று வருடங்கள் முடிந்த பிறகு கடன் பெறும் வசதி இருக்கிறது. இந்த திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணையலாம்.

இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதேபோன்று அதிகபட்சம் பென்ஷன் தொகை ரூ 9,250. மாதாந்திரம் முறையில் இந்த பென்ஷன் தொகையானது வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் காலாண்டு, அரையாண்டு, ஒரு வருட முறையிலும் நீங்கள் பென்ஷன் வாங்கலாம்.

அதாவது, குறைந்தபட்சம் காலாண்டில் ரூ 3000, அரையாண்டில் ரூ.6,000 மற்றும் ஒரு ஆண்டில் ரூ 12,000 பென்ஷன் வாங்கலாம். அதேபோன்று அதிகபட்சமாக காலாண்டில் ரூ 27,750, அரையாண்டில் ரூ 55,500 மற்றும் ஒரு ஆண்டில் ரூ 1,11,000 பென்ஷன் கிடைக்கும்.

Similar News