கடைசியா ஒன்று சார்? எப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க..? வாக்கிங் போன முதல்வரிடம் கேட்ட கேள்வி பெண்!
கடைசியா ஒன்று சார்? எப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க..? வாக்கிங் போன முதல்வரிடம் கேட்ட கேள்வி பெண்!;
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் பம்பரமாக சுழன்று வருகிறார். பல்வேறு திட்டங்கள், மாநில வளர்ச்சிப் பணிகள் என தீவிரம் காட்டி வரும் முதல்வர் உடற்பயிற்சி செய்யவும் தவறுவதில்லை.
பொதுவாகவே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வது, நடைப்பயிற்சி செய்வது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது என உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலையில் சென்னை அடையாறு தியோஃபிகள் சொசைட்டி வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் நடைப்பயிற்சி செய்ய வந்திருந்தார். அப்போது நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இயல்பாக உரையாடினார்.
அப்போது அவருடன் பேசிய ஒரு பெண்மணி, “சார் இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்களை நான் ஏர்போட்டில் சந்திச்சேன். நீங்கள் கட்டாயம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று அவளிடம் கூறினேன். நீங்கள் ஆட்சிக்கு வந்தது எனக்கு சந்தோஷமாக உள்ளது .ஒவ்வொரு விஷயத்தையும் நீங்கள் பார்த்து பார்த்து செய்கிறீர்கள். இதை நீங்கள் இப்படியே தொடர வேண்டும். கால்பந்து விளையாட ஸ்பெயின் சென்றுள்ள உங்கள் பேரன் வெற்றி பெற வேண்டும் என்று மடை திறந்த வெள்ளம் போல பேச ஸ்டாலின் முகத்தில் சிரிப்பு பொங்கியது .
அத்துடன் நிறுத்திக்கொள்ளாத அந்தப் பெண் கடைசியா ஒன்று சார்? எப்படி சார் இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க என்று கேட்டார். அதற்கு ஸ்டாலின் , உடற்பயிற்சி செய்கிறேன் என்று பதிலளிக்க ஆமாம் சார் யூடியூப்பில் உங்கள் வீடியோக்களை பார்க்கிறோம் என்று பதிலளித்தார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், என்றும் மார்க்கண்டேயன்... எங்கள் முதல்வர். இன்று காலை நடைபயிற்சியின்போது பொதுமக்கள் புகழாரம்.. என்று குறிப்பிட்டுள்ளார்.
என்றும் மார்க்கண்டேயன்..எங்கள் முதல்வர்.இன்று காலை நடைபயிற்சியின்போது பொதுமக்கள் புகழாரம்... pic.twitter.com/nFvYEF8his
— Subramanian.Ma (@Subramanian_ma) September 21, 2021