புகைப்படமே இல்லாமல் கடத்தப்பட்ட ஒரு மாத குழந்தை 2 மணி நேரத்தில் மீட்பு..!!
புகைப்படமே இல்லாமல் கடத்தப்பட்ட ஒரு மாத குழந்தை 2 மணி நேரத்தில் மீட்பு..!!
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹேமந்த் என்பவர் சென்னை கேளம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் இவரது ஒரு மாத குழந்தையை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ரயில் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு போலீசார் தகவல் அளித்தனர்.
இதனிடையெ சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் இருந்த தம்பதியை ரயில்வே போலீசார் பிடித்த விசாரத்ததில் குழந்தை கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து குழந்தையை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட தம்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.