புதிய யுக்தியை கையில் எடுத்த ஆன்லைன் திருடர்கள்.. மக்களுக்கு எச்சரிக்கை !!
புதிய யுக்தியை கையில் எடுத்த ஆன்லைன் திருடர்கள்.. மக்களுக்கு எச்சரிக்கை !!
ஆன்லைன் திருடர்கள் புதிய வகை மோசடியில் ஈடுபட்டு வருவதால் வங்கி வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க சைபர் பாதுகாப்பு அமைப்பான 'செர்ட்இன்' எச்சரித்துள்ளது.
இன்றைய நவீனக்காலத்தில் தொழில்நுட்பத்துடன் கூடிய மோடிசள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்தநிலையில், இணைய குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள, 'செர்ட்இன்' அமைப்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, பிஷ்ஷிங் எனப்படும் இணைய மோசடியில் ஈடுபடுவோர் தற்போது புதிய முறையை கையாண்டு வருகின்றனர். வங்கி வாடிக்கையாளர்களுக்கு மொபைல்போனில் குறுஞ்செய்தியை அனுப்புகின்றனர்.
அதில், வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது போன்ற செய்திகள் இடம்பெறும். இதை தவிர்க்க, அந்த எஸ்.எம்.எஸ்-ல் உள்ள இணைய இணைப்பின் மூலம் சரிபார்க்க சொல்வர். ஆனால், வாடிக்கையாளர் அந்த ஆன்லைன் பக்கத்தில் நுழைந்தால், அவர்களுடைய வங்கியின் இணையதளம் போன்றே இருக்கும் போலி இணையதளத்துக்குள் நுழைவர். அதேநேரத்தில் மோசடிக்காரர்களுக்கு உண்மையான இன்டர்நெட் பேங்கிங் தகவல்கள் உள்ளிட்டவை கிடைத்து விடும்.
அதன் அடிப்படையில் உண்மையான வங்கிக் கணக்குக்குள் நுழைந்து பணத்தை திருடுவார்கள். குறுஞ்செய்தியில் வரும் இணைய இணைப்பின் இறுதியில், 'என்கிராக்' என்ற வாசகம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அதோடு குறுஞ்செய்தியில் வரும் எந்த இணைய இணைப்பையும் பயன்படுத்தாமல் இருப்பதே பாதுகாப்பானது என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
newstm.in