இனி ஒன்று மட்டும்தான்.. விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு..!

இனி ஒன்று மட்டும்தான்.. விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு..!

Update: 2022-01-23 04:45 GMT

விமான பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்வதில் காலதாமதம், நெரிசல் உள்ளிட்ட பல்வேறு இடையூறுகள் உள்ளன. கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால், உள்நாட்டு விமான பயணியர் தங்கள் கைகளில் ஒரு ஹேண்ட் பேக் மட்டுமே எடுத்து வர வேண்டும் என உள்நாட்டு விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உள்நாட்டு விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘உள்நாட்டு விமான பயணியர் சராசரியாக இரண்டு அல்லது மூன்று ஹேண்ட் பேக்குகளை 'ஸ்கிரீனிங் பாயின்ட்'டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இவற்றை அனுமதிப்பதற்கான நேரம் மற்றும் நெரிசலால் அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

எனவே உள்நாட்டு விமானங்களில் பயணியர் ஒரு ஹேண்ட் பேக் மட்டுமே எடுத்து வர வேண்டும். பெண்கள் மட்டும் தங்களின் தனிப்பட்ட கைப்பையை உடன் எடுத்து வரலாம்.

இதுகுறித்து அனைத்து விமான நிறுவனங்களும் பயணியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த தகவலை டிக்கெட்டிலும் அச்சிட்டு வழங்கலாம்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News