சுயமரியாதை இல்லாதவர்கள்தான் பாஜகவில் இருக்க முடியும்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜக எம்.எல்.ஏ பேட்டி

சுயமரியாதை இல்லாதவர்கள்தான் பாஜகவில் இருக்க முடியும்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜக எம்.எல்.ஏ பேட்டி

Update: 2021-10-28 04:50 GMT

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமடன்ற தேர்தலுக்கு முன்னதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு, ராய்கஞ்ச் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் மாநில அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜீ முன்னிலையில் இன்று மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் கிருஷ்ண இணைந்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கிருஷ்ணா பேசுகையில்,

“சுயமரியாதை இல்லாதவர்கள்தான் பாஜகவில் இருக்க முடியும். மக்கள் விரோத கொள்கைகளால் வருத்தமடைந்தேன். பெட்ரோல் விலை உயர்விற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், பாஜகவில் இருக்க முடியாது என நினைத்துக் கொண்டிருந்தேன். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மம்தாவின் மக்கள் நலக் கொள்கைகளுக்கு ஆதரவாக நான் பேசவில்லை. அதை நான் தற்போது சரி செய்ய நினைக்கிறேன்.

ஒரு எம்.எல்.ஏ.வாக நான் சிறப்பான பணிகளை மேற்கொள்ள விரும்பினால், அதை பாஜக அனுமதிக்கவில்லை.” என்றார்.

சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு பாஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணையும் 5-வது எம்.எல்.ஏ. கிருஷ்ண கல்யாணி ஆவார். இது எதிர்க்கட்சியான பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

Tags:    

Similar News