அய்யோ! வெறும் 28 மணி நேரத்தில் 10 மாடி கட்டடம் கட்டி முடிப்பு !! வியப்பூட்டும் வீடியோ !!

அய்யோ! வெறும் 28 மணி நேரத்தில் 10 மாடி கட்டடம் கட்டி முடிப்பு !! வியப்பூட்டும் வீடியோ !!

Update: 2021-06-19 19:34 GMT

வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை முடித்துப்பார் என பழமொழி உண்டு. இதனை சூழ்நிலைக்கு ஏற்றவாறும் கூறிக்கொள்ளலாம். அந்த வகையில் வீடு கட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் சீனாகாரன் வெறும் 28 மணி நேரத்தில் 10 மாடி கட்டடம் கட்டி முடிச்சிட்டான் எனக்கூறி வாயை பிளக்கவைத்துள்ளனர். 

சீனாவின் சாங்ஷா நகரில் கட்டப்பட்டிருக்கும் இந்த 10 மாடிக் கட்டடத்தை பிராட் குரூப் நிறுவனம் 28 மணி நேரம் 45 நிமிடத்தில் கட்டி முடித்ததாக செய்தி கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தைக் கட்டும் 4 நிமிட வீடியோவை அந்த நிறுவனமே யூடியூப்பிலும் பதிவேற்றம் செய்துள்ளது. அதில், மிக எளிதான கட்டுமானப் பணி. போல்டுகளை இணைத்து விட்டு, குடிநீர் மற்றும் மின்சார இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோவில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 கட்டுமானப் பணிகள் தொடங்கியதும், சுவர்கள், ஜன்னல்கள், அலமாரிகளை ஒன்றன் அருகே ஒன்று வைத்து, நட்டு, போல்டுகளைக் கொண்டு இறுக்கி,ஒவ்வொரு மாடியையும் முடித்து, பிறகு ஒன்றன் மேல் ஒன்றாக கட்டுமானங்களை மிகச் சரியாக அடுக்கி அதனை இணைத்துவிட்டு, கட்டுமானம் முழுமையாக முடிந்ததும், அந்தக் கட்டடத்துக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Full View

newstm.in

Tags:    

Similar News