இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் லண்டனில் விரைவில் சலூன் கடையை தொடங்க உள்ளது.

உலக அளவில் இணைய வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் கொடி கட்டி பறக்கிறது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜெஃப் பெசோஸ் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளார். அந்த அளவுக்கு தனது கிளைகளை பரப்பி அமேசான் செயல்பட்டு வருகிறது.

இணைய வர்த்தகம் மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு துறையிலும் அமேசான் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் சலூன் துறையில் கால் பதிக்க உள்ளது.

முதலில் அமேசான் லண்டனில் சலூன் கடையை தொடங்க திட்டமிட்டுள்ளது. அங்கு அகுமேட்டட், ரியாலிட்டி போன்ற செயலி தொழில்நுட்பங்கள் பயன்படுத்த உள்ளனர்.

முதல் கட்டமாக சலூன் அமேசான் ஊழியர்களுக்காக மட்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: