அச்சச்சோ...! இன்று இரவு முதல் மே10 வரை முழு ஊரடங்கு! கர்நாடகாவில் வேகமெடுக்கும் கொரோனா!

அச்சச்சோ...! இன்று இரவு முதல் மே10 வரை முழு ஊரடங்கு! கர்நாடகாவில் வேகமெடுக்கும் கொரோனா!

Update: 2021-04-27 06:13 GMT

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வந்த போதிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் குறிப்பிட்ட 10 மாநிலங்களில் பாதிப்பு அசுர வேகம் எடுத்துள்ளது.


அந்த வகையில் , கர்நாடகாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதனையடுத்து 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட இருப்பதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ‘கர்நாடகத்தில் இன்று ஏப்ரல் 27 இரவு 9 மணி முதல் மே10ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஊரடங்கு காலத்தில் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News