மறு உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட உத்தரவு !!

மறு உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட உத்தரவு !!

Update: 2021-04-09 19:52 GMT

தலைநகர் டெல்லியை பொறுத்தவரையில் கொரோனா பரவல் என்பது நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 7,437 நபர்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிறகு எதற்கும் யாரும் வெளியே நடமாடக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக காலவரையின்றி மூடுவதாக தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இந்த செய்தியை பதிவிட்டுள்ள அவர்; கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மறு உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்படுவதாகவும், ஆன்லைன் வாயிலாக கல்வியை வேண்டுமென்றால் பயிற்சி அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு வந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News