செம்ம ஃபிட்டா ஜம்முன்னு ஜிம்மில் நம்ம சி.எம்.! வைரல் வீடியோ!!

செம்ம ஃபிட்டா ஜம்முன்னு ஜிம்மில் நம்ம சி.எம்.! வைரல் வீடியோ!!

Update: 2021-06-28 21:14 GMT

சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரையிலும் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடற்பயிற்சிக் கூடத்தில், பயிற்சியாளர் வழிகாட்டுதலில் உடற்பயிற்சி செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீடியோவை திமுகவினர் சமூகத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

கையில்லா பனியனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்து வரும் காட்சி, அனைவரும் உடல்நலத்தைப் பேணவேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் உந்துதலாக இருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர்களில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடற்பயிற்சிக்கு பெரிதும் பேசப்பட்டவர். ஆனால் அவர் முதலமைச்சர் ஆன பிறகு இத்தகைய உடற்பயிற்சிப் படங்கள் எதுவும் வெளியானது இல்லை.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் காலை நேர நடைப் பயிற்சி அனைவரும் அறிந்தது. அந்த நடைப்பயிற்சியின் போது பெண்களுக்கு இலவச புகையில்லா அடுப்பு உள்பட பல்வேறு அரசியல், சமூகநல முடிவுகள் எடுக்கப்பட்டதும் வரலாறு ஆகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நீண்டகாலமாகவே நடைப்பயிற்சியும் செய்து வருபவர் தான். தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்தந்த ஊர்களில் உள்ள முக்கிய சந்தைப்பகுதியில் நடைப்பயிற்சியுடன் மக்களையும் சந்தித்து வந்தார்.

ஆட்சியாளர் என்பவர் தன்னுடைய உடல்நலத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய உடல்நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது மட்டுமல்லாமல் காலத்தின் கட்டாயமும் ஆகும்.

Full View

Tags:    

Similar News