கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் 20 ஓவர் போட்டிகள்! சாலை பாதுகாப்பை வலியுறுத்தி துவக்கம்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில், ‘சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்’ என்ற பெயரில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

சச்சின் தெண்டுல்கர் உட்பட, ஷேவாக், லாரா, சந்தர்பால், பிரெட்லீ, ஜான்டி ரோட்ஸ், முரளிதரன், தில்ஷன் உள்ளிட்டோர் 110 முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய், இந்தியாவின் சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இன்டீஸ், தென்னாப்பிரிக்கா என்று ஐந்து நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். நேற்று துவங்கிய இந்த போட்டித் தொடர் பிப்ரவரி 16ம் தேதி வரையில் நடைப்பெற இருக்கிறது.
newstm.in