அடுத்த படத்தின் தலைப்பை இப்போதே அறிவித்த பா.ரஞ்சித் !!

அடுத்த படத்தின் தலைப்பை இப்போதே அறிவித்த பா.ரஞ்சித் !!

Update: 2021-07-19 19:38 GMT

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் பா.ரஞ்சித். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் இணை இயக்குநராக இருந்த பா.ரஞ்சித், தனது முதல் திரைப்படமான ’அட்டக்கத்தி’ மூலம் கவனம் ஈர்த்தார். அதன்பின்னர் இயக்குநர் பா.ரஞ்சித் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ என்ற நான்கு படங்களே இயக்கி இருந்தாலும் அவரது படங்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தையும் விவாதத்திற்குரியதாகவும் மற்றியுள்ளன. 

தற்போது, அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ வரும் ஜூலை 22 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகிறது. அதேசமயம், ‘ரைட்டர்’, ’குதிரை வால்’, துருவ் விக்ரமின் பெயரிடாதப்படம் உள்ளிட்டப் படங்களையும் அவர் தயாரித்து வருகிறார்.  

இந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஃபிலிம் கம்பானியன் ஊடகம் பா.ரஞ்சித்துடன் நடத்திய நேர்காணலில் ’உங்கள் அடுத்தப் படம் என்ன?’ என்ற கேள்விக்கு, ’நட்சத்திரம் நகர்கிறது’என்ற படத்தை இயக்குகிறேன். அது காதல்களைப் பற்றியப் படம். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் ஏற்படக்கூடிய காதலைக் குறித்து பேசப்போகிறது என்று தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே, கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டக்கத்தி’ படம் காதல் கதைகளை கூறி இளைஞர்களை கவர்ந்தது. இதனால் தற்போதே அவரது திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


newstm.in


 

Tags:    

Similar News