த்ரிஷ்யம்- 2 உரிமையை கைப்பற்ற பேச்சுவார்த்தையில் கமல்ஹாசன்..!

த்ரிஷ்யம்- 2 உரிமையை கைப்பற்ற பேச்சுவார்த்தையில் கமல்ஹாசன்..!

Update: 2021-02-19 16:11 GMT

அமேசான் பிரைம் ஒ.டி.டி வலைதளத்தில் த்ரிஷ்யம் 2 திரைப்படம் வெளியானதை அடுத்து, அதனுடைய முதல் பாகத்தை ரீமேக் செய்ததது போலவே, இப்படத்தையும் ரீமேக் செய்ய கமல்ஹாசன் பேசிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப், அதனுடைய தமிழ் ரீமேக்கையும் இயக்கினார். பாபநாசம் என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ், கலாபவன் மணி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தற்போது இதனுடைய இரண்டாவது பாகம் மலையாளத்தில் த்ரிஷயம்- 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. அதே ஜித்து ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக த்ரிஷய்ம் - 2 தயாராகியுள்ளது.

இந்த படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை போலவே, இரண்டாவது பாகத்திற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர். முதல் பாகத்தை போலவே, த்ரிஷ்யம் 2 படமும் தமிழில் ரீமேக் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கான உரிமையை பெறுவதற்கான முயற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும், இந்த படத்தையும் ஜித்து ஜோசப் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் த்ரிஷ்யம் 2 ரீமேக் செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 


 

Tags:    

Similar News