128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!!

128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!!

Update: 2022-01-26 06:00 GMT

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.

இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத், மறைந்த முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததெப் பட்டாசர்ஜி உள்ளிட்ட 17 பேர் பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உட்பட 107 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம், நடிகை சௌகார் ஜானகி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா, பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகரா உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருத பெற உள்ளனர்.


newstm.in

Similar News