கங்கனாவையும் விட்டுவைக்காத கொரோனா- இன்ஸ்டாவில் பகீர்..!

கங்கனாவையும் விட்டுவைக்காத கொரோனா- இன்ஸ்டாவில் பகீர்..!

Update: 2021-05-08 20:04 GMT

தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அதனால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் நடிகை கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் கொரோனா பெருந்தொற்று குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்ததற்காக ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்தார்.

நேற்று ஈஷா ஆதியோகியின் வீடியோவை பதிவிட்ட அவர் இன்று வெறுமே அமர்ந்து தியானம் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதனுடன் பெரிய ஒரு நீடிய பதிவையும் அவர் எழுதியிருந்தார். அதில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்கனா எழுதியுள்ள பதிவில், ”கொரோனா தொற்று எனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். விரைவில் நான் கொரோனாவில் இருந்து மீண்டு வருவேன் என்கிற நம்பிக்கை உள்ளது. கொரோனா மீது அச்சம் கொண்டால் அது நம்மை மேலும் அச்சுறுத்தும். அதனால் அச்சப்ப்படமாட்டேன். மக்களே அனைவரும் ஒன்றுகூடி கொரோனோவை ஒழிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News