ஆன்லைன் திட்டத்தால் இளைஞருக்கு பகீர் ! பெண் போட்டோவுடன் கிடைத்த உரிமம் !

ஆன்லைன் திட்டத்தால் இளைஞருக்கு பகீர் ! பெண் போட்டோவுடன் கிடைத்த உரிமம் !

Update: 2021-06-15 19:30 GMT

ஆன்லைனில் லைசன்ஸ் பதிவுசெய்த கல்லூரி மாணவருக்கு இளம்பெண் போட்டோவுடன் உரிமம் கிடைத்ததால் குழப்பம் ஏற்பட்டது. 

மகாராஷ்டிராவில் ஆன்லைனில் பதிவுசெய்து ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை அண்மையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தொடங்கிவைத்தார். இத்திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும்  வரவேற்பு தெரிவித்தனர். இந்த நிலையில், புனேவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆசிஷ் செடே பயிற்சி உரிமத்துக்காக ஆன்லைனில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் பதிவு செய்தநிலையில் இளைஞருக்கு உரிமம் கிடைக்கப்பெற்றபோது. ஆனால் அதில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக வேறொரு பெண்ணின் புகைப்படம் மாறி வந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

அதாவது இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளன்றே காலை 11 மணியளவில் Parivahan Sewa இணையதளத்தில் தனது ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை ஓட்டுநர் உரிமம் பெற பதிவேற்றி அதனுடன் ரூ.365ஐ கட்டணமாகவும் செலுத்தி இருக்கிறார். பயிற்சி தேர்வுக்கு பின்னர் அவருக்கு இணையதளத்திலிருந்து உடனடியாக பயிற்சி ஓட்டுநர் உரிமம் கிடைத்திருக்கிறது. ஆனால் உரிமம் கிடைக்கப்பெற்றபோது அதில், அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக மற்றொரு பெண்ணின் புகைப்படம் இருந்ததால் அவர் உடனடியாக புனே ஆர்.டி.ஓ அலுவலகத்தை தொடர்புகொண்டு இதுகுறித்து விசாரித்திருக்கிறார்.

அப்போது, இணையதளம் இயங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு எதுவுமில்லை. ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை சேர்க்கும்போது குழப்பம் நேர்ந்திருக்கலாம் என்றும் இது சரிசெய்யப்பட்டதாகவும் கூறினார்.

newstm.in

Tags:    

Similar News