இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தான் கடற்படையும் அட்டூழியம்.. மீனவர் சுட்டுக்கொலை !!

இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தான் கடற்படையும் அட்டூழியம்.. மீனவர் சுட்டுக்கொலை !!

Update: 2021-11-07 22:43 GMT

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், மீனவர்களின் வலைகளை அறுத்து, படகு உள்ளிட்டவைகளை சேதப்படுத்துமாக அவ்வப்போது இலங்கை கடற்பரை அட்டூழியம் செய்து வருகிறது. சில நேரங்களில் மீனவர்கள் மீது கடும் தாக்குதலும் நடத்துகின்றனர். இதற்கு தமிழகத்தில் இருந்து எப்போதும் எதிர்ப்பு குரல் எழுந்துகொண்டே தான் இருக்கிறது.

தற்போது பாகிஸ்தான் கடற்படையினரும் தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து வருகிறது. அதாவது, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 7 மீனவர்கள் குஜராத் கடற்பகுதிக்கு உட்பட்ட அரபிக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். சர்வதேச கடல் எல்லை அருகில் அவர்கள் சென்றபோது, அங்கு ரோந்து பணியில் இருந்த பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மகாராஷ்டிர மீனவர் ஸ்ரீதர் ரமேஷ் சாம்ரே (32) உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவர் காயமடைந்தார். நேற்று மாலை இந்த தாக்குதல் நடந்துள்ளது.

எனினும் உயிரிழந்த மீனவரின் உடல் குகா துறைமுகத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. போர்பந்தர் நபி பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கிச்சூட்டில்  இந்திய மீனவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Tags:    

Similar News