முடங்கியது தலிபான்களின் கணக்கு!

முடங்கியது தலிபான்களின் கணக்கு!

Update: 2021-08-18 12:00 GMT

தலிபான்களின் முகநூல் கணக்குகள் ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ள நிலையில், தலிபான் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்படுவதாக சமூக ஊடக நிறுவனமான முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் காபூலில் இருந்து அவசரமாக வெளியேறினர். தலிபான்களுக்கு அஞ்சி ஏராளமான ஆப்கானியர்களும் நாட்டை விட்டு வெளியேற தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தலிபான்களின் முகநூல் கணக்குகள் முடக்கப்படுவதாக முகநூல் நிறுவனம் அறிவித்தது. பல ஆண்டுகளாக, தலிபான்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தமது செய்திகளை பரப்பி வந்தனர். அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் ஒரு பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுவோரின் முகநூல் கணக்குகளையும், பதிவுகளையும் நீக்கும் பணிகள் தொடங்கியிருப்பதாகவும், இதற்காக ஒரு பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச சமூகத்தின் அதிகாரத்தை பின்பற்றுவதாகவும் முகநூல் நிறுவனம் தெரிவித்திருந்தது.

மேலும் இவை, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்பட அதன் அனைத்து தளங்களுக்கும் பொருந்தும் என்பதை முகநூல் எடுத்துரைத்திருந்தது.

இந்நிலையில், தலிபான் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்படுவதாக சமூக ஊடக நிறுவனமான முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது. மெசஞ்சர் செயலியான வாட்ஸ்-அப், முகநூல் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News