பெற்றோர் நிம்மதி.. அடுத்த மாதம் முதல் உங்கள் குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி !

பெற்றோர் நிம்மதி.. அடுத்த மாதம் முதல் உங்கள் குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி !

Update: 2021-09-14 16:47 GMT

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்துள்ளன. தற்போது 75 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

அதற்கு கீழ் வயதுடைய குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை. உலகில் பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் 12 வயது முதல் 17 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசி மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மருந்துகள் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. அதே நேரத்தில் சைடுஸ் காடிலா என்ற நிறுவனம் ‘சைகோ வி-டி’ என்ற புதிய மருந்தை உருவாக்கி உள்ளது.

இதை குழந்தைகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த மருந்தின் சோதனை வெற்றி பெற்று இருக்கிறது. எனவே இந்தியாவில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இவற்றின் உற்பத்தி தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் மத்திய அரசுக்கு அது சப்ளை செய்யப்படும். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இருக்கிறார்கள்.

முதலாவதாக இணை நோய் உள்ள குழந்தைகளுக்கே தடுப்பூசி போடப்பட இருக்கிறது. அதாவது இதய நோய், உடல் பருமன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற நோய் உள்ள குழந்தைகளுக்கு முதலில் ஊசி போடப்படும். அந்த வகையில் நாடு முழுவதும் 20 முதல் 30 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு 3 மாதத்தில் ஊசி போட்டு முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மற்ற குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் மற்ற குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியும் என்று சுகாதார அதிகாரிகள் கூறி உள்ளனர்.  

newstm.in

Tags:    

Similar News