கட்சி போஸ்டர் ஒட்டுனா கிழி தான்… தேர்தல் ஆணையம் அதிரடி!!
கட்சி போஸ்டர் ஒட்டுனா கிழி தான்… தேர்தல் ஆணையம் அதிரடி!!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டு வாடாவை தடுக்க வருவாய்துறையினர், காவல்துறை அடங்கிய சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் கோவையில் பல்வேறு தேர்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.
கோவை உக்கடம் மேம்பாலத்தின் தூண்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், அரசு பள்ளிகள், பொது சுவர்கள் என கோவை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள கட்சி போஸ்டர்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதுபோல் அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் உள்ள சுவர்களில் எழுதப்பட்டு இருந்த அனைத்து அரசியல் கட்சிகளின் விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் போது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அதேபோல அரசியல் தலைவர்களின் சிலைகளையும் மூடும் பணியையும் மேற்கொள்ள உள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
newstm.in