பண்டிகை காலத்தில் பிரதான எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம்- பயணிகள் அதிருப்தி !
பண்டிகை காலத்தில் பிரதான எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம்- பயணிகள் அதிருப்தி !
பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர், வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர்- குருவாயூர் (வண்டி எண்:16127) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற டிசம்பர் மாதம் 26, 27, 28, 29, 31ஆம் தேதி மற்றும் ஜனவரி மாதம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10ஆம் தேதிகளில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும்.
அஜ்மீர்-ராமேசுவரம் (20973) இடையே இயக்கப்படும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி (இன்று) மற்றும் ஜனவரி மாதம் 1, 8ஆம் தேதிகளில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும்.
பிகானேர்- மதுரை (22632) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி (நாளை) மற்றும் ஜனவரி மாதம் 2ஆம் தேதிகளில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும்.
மதுரை-சென்னை எழும்பூர் (12636) இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற டிசம்பர் மாதம் 30, 31ஆம் தேதி மற்றும் ஜனவரி மாதம் 6ஆம் தேதிகளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் விழுப்புரம் வழியாக இயக்கப்படும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து பண்டிகை காலம் வரும் நேரத்தில் இதுபோன்று ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ரயில் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in