பயணிகளே, ரயிலில் இதை செய்யாதீங்க.. ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு..!

பயணிகளே, ரயிலில் இதை செய்யாதீங்க.. ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு..!

Update: 2022-01-23 05:50 GMT

ரயில் பயணத்தில் பலரும் சத்தமாக பேசிக்கொண்டே வருவதும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சத்தமாக பாடல்களை கேட்டுக்கொண்டு வருவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

தாங்கள் செய்யும் இதுபோன்ற செயல்கள் மற்ற பயணிகளுக்கு அசௌகரியமாக இருக்கும் என அவர்கள் நினைத்து பார்ப்பது இல்லை.

இந்நிலையில், ரயிலுக்குள் சத்தமாக பாட்டு கேட்பதற்கும், செல்போனில் சத்தமாக பேசுவதற்கும் மத்திய ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறி அப்படி நடந்து கொண்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பயணி தனக்கு அசவுகரியம் ஏற்பட்டதாக புகார் அளித்தால் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே போலீசார் உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை எரிய விடக்கூடாது எனவும் ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

Similar News