3 கோடி வரி பாக்கியை கட்டுங்க...'' ரிக்சா ஓட்டும் முதியவருக்கு அதிர்ச்சியை கொடுத்த வருமான வரித்துறை..!!

3 கோடி வரி பாக்கியை கட்டுங்க...'' ரிக்சா ஓட்டும் முதியவருக்கு அதிர்ச்சியை கொடுத்த வருமான வரித்துறை..!!

Update: 2021-10-26 05:15 GMT

உத்திரபிரதேச மாநிலம் பகல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் சிங். இவர் அதே பகுதியில் ரிக்சா வண்டி ஓட்டி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசில் 3 கோடி ரூபாய்(3,47,54,796) வரை வரி பாக்கி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரதாப் சிங், காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில் பிரதாப் சிங்கின் பான் அட்டை மூலம் யாரோ ஒருவர் ஜிஎஸ்டி எண்ணைப் பெற்று தொழில் செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News