நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பீட்சா டெலிவரிபாய்
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற காயத்ரி சாய்நாத் என்ற நடிகை தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 9ஆம் தேதி ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்தார். பீட்சாவை கொண்டுவந்த பரமேஸ்வரன் என்ற டெலிவரிபாய் மீண்டும் மீண்டும் காயத்ரி சாய்நாத்தை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறுது. அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
நடிகையின் மொபைல் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவேற்றி, பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற காயத்ரி சாய்நாத் என்ற நடிகை தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 9ஆம் தேதி ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்தார். பீட்சாவை கொண்டுவந்த பரமேஸ்வரன் என்ற டெலிவரிபாய் மீண்டும் மீண்டும் காயத்ரி சாய்நாத்தை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறுது. அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பரமேஸ்வரன் நடிகையை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவரது தொலைபேசி எண்ணை, ஐட்டம் என்று தனது நண்பர்களின் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து காயத்ரி சாய்நாத்துக்கு பலரும் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை, இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சக்திவேல், சுந்தரம் சந்திரபோஸ், மகேஸ்வரன் ஆகிய மூன்று பேரின் பெயரையும், தொலைபேசி எண்ணையும் காவல்துறையிடம் அளித்தார்.
புகாரை அடுத்து பரமேஸ்வரனை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடிகையை பழிவாங்கும் நோக்கத்தில் இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த காவல்துறையினர், வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
newstm.in