மக்கள் அதிர்ச்சி..!! மீண்டும் 36 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை..!!

மக்கள் அதிர்ச்சி..!! மீண்டும் 36 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை..!!

Update: 2022-01-12 11:11 GMT

கொரோனா காலத்தில் தங்கம் விலை கூடினாலும், குறைந்தாலும் அதன் மீதான மோகம் மற்றும் சற்றும் குறையவில்லை என்பதே உண்மை. 

இந்த மாதத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. இடைப்பட்ட காலத்தில் குறைய தொடங்கியிருந்தாலும் அடுத்து வந்த நாட்களில் ஓரளவுக்கு உயர்வை கண்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,000-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ரூ.4,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.65,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News