மக்களே உஷார்! வெளியான புதிய பரபரப்பு அறிவிப்பு!

மக்களே உஷார்! வெளியான புதிய பரபரப்பு அறிவிப்பு!

Update: 2021-04-09 14:37 GMT

கொரோனா வைரஸ் தொற்று மொத்த உலகத்தையுமே புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர், படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் சேரும் காலமான 4 வாரங்களுக்குள்ளேயே பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் முக கவசம் அணிவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். சமூக விலகலையும் யாரும் கடைப்பிடிப்பதில்லை. இந்நிலையில், கீழ்ப்பாக்கம்  மருத்துவமனை  முதல்வர் இந்த வைரஸ் தொற்று பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது பரவி வரும்  கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் முன்பு பரவி வந்ததை விட அதிகளவில் வீரியமாக இருப்பதாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு முன்பு பரவி வந்த கொரோனா தொற்று வைரஸ், பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுவதற்கு 4 நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்றால், இப்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று 2 நாட்களில் 4 பேருக்கு பரவும் அளவுக்கு அதிகளவில் வீரியமுள்ளதாக இருக்கிறது. மேலும் இந்த தொற்று நேரடியாக நுரையீரலை சென்று தாக்குவதால், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பும் அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார்.
 

Tags:    

Similar News