மக்களே உஷார் !! இன்று முதல் இரவு ஊரடங்கு...
மக்களே உஷார் !! இன்று முதல் இரவு ஊரடங்கு...
இந்தியாவில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், குஜராத், பஞ்சாப், தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தான் அதிக கொரோனா பாதிப்பு இருக்கிறது. இதில் கர்நாடாகவில் கடந்த முறையில் அதிக பாதிப்பு இருந்த நிலையில் இந்த முறையும் பாதிப்பு அதிகரித்து வருவது அங்கு இருக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகளுடன் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.
கர்நாடகா மாநிலத்திலும் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். பெங்களூரு, மைசூரு, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட 8 இடங்களில் இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரவுநேர ஊரடங்கின்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் இந்த ஊரடங்கு இன்று முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இரவு நேர ஊரடங்கு என்று சொல்லாமல் கொரோனா ஊரடங்கு என்று சொல்ல வேண்டும் என்ற பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கர்நாடகா முதல்வர் தெரிவித்துள்ளார்.