மக்களே, 12 மணிக்குள் பயணங்களை முடிச்சுக்கோங்க.. சென்னை காவல்துறை அறிவிப்பு..!

மக்களே, 12 மணிக்குள் பயணங்களை முடிச்சுக்கோங்க.. சென்னை காவல்துறை அறிவிப்பு..!

Update: 2021-12-30 12:20 GMT

சென்னையில், நாளை இரவு 12 மணிக்கு மேல் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: டிசம்பர் 31 அன்று இரவு 12 மணிக்கு மேல் அத்தியாவசிய வாகன போக்குவரத்தை தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என டிசம்பர் 28-ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பின் தொடர்ச்சியாக தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 31-ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்து தவிர மற்ற வாகன போக்குவரத்து ஜனவரி 1-ம் தேதி காலை 5 மணி வரை அனுமதி இல்லை.

எனவே பொதுமக்கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட டிசம்பர் 31-ம் தேதி இரவு 12 மணிக்குள் தங்களது பயணங்களை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News