மக்களே கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள்.. பிரதமர் உருக்கம் !!

மக்களே கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள்.. பிரதமர் உருக்கம் !!

Update: 2021-07-05 18:06 GMT

கொரோனா வைரசுடன் வாழ மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியதில் இருந்து அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்து உள்ளது. அங்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும் அவ்வப்போது குறையும் தொற்று பரவல் பின்னர் அதிகரிக்கிறது. இதனிடையே, அண்மையில் பல நாடுகளில் பரவிய டெல்டா வகை வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து, இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு இங்கிலாந்து அரசு தள்ளிவைத்தது.  இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 49,03,434 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், அந்நாட்டில் ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக முகக்கவசங்களை அணிந்து கொள்வது தனிநபர் சார்ந்த விருப்பம்  என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே வெளியே செல்லும் போது விருப்பம் இருந்தால் முககவசம் அணியலாம் என்ற அறிவிப்புக்கு மருத்துவ நிபுணர்களிடம் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:- தொற்றுநோய் முடிந்துவிடவில்லை என்பதையும், வரும் வாரங்களில் பாதிப்புகள்  தொடர்ந்து உயரும் என்பதையும் நான் வலியுறுத்துகிறேன்.  இந்த வைரசுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். ​நாம் அனைவரும் கொரோனா அபாயங்களை கவனமாக நிர்வகித்து, நம் வாழ்க்கையைப்  நடத்த பழகி கொள்ள வேண்டும் என கூறினார். 
 

newstm.in

Tags:    

Similar News