சென்னை மக்களே.. 16 மற்றும் 17ம் தேதி இங்கெல்லாம் கரன்ட் இருக்காது..!

சென்னை மக்களே.. 16 மற்றும் 17ம் தேதி இங்கெல்லாம் கரன்ட் இருக்காது..!

Update: 2021-12-15 17:50 GMT

சென்னையில் நாளை (டிச.16) மற்றும் நாளை மறுநாள் (17ம் தேதி) பராமரிப்புப் பணி காரணமாக எங்கெங்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னையில் 16.12.2021 தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

16.12.2021 மயிலாப்பூர் பகுதி:
மாட்டன்குப்பம் அனைத்து பகுதி, வி.ஆர்.பிள்ளை தெரு, கற்பக கன்னியம்மன் கோயில் 1 முதல் 5-வது தெரு வரை, பழனியம்மன் கோயில் 1 முதல் 5-வது தெரு வரை, பாரதி சாலை, ராஜா அனுமந்த லாலா தெரு, வெங்கடாசல நாயக்கன் 1 முதல் 3-வது தெரு வரை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

17.12.2021 தாம்பரம் பகுதி:
பல்லாவரம் டானரி தெரு, கிரிபித் தெரு 1 முதல் 4 மற்றும் மெயின் ரோடு, சோமசுந்தரம் 1 மற்றும் 2-ம் தெரு, முனிவர் அவென்யூ, பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் மெயின் ரோடு, கோகுல் நகர், ராமையா நகர், சேகரன் நகர், ராதா என்க்ளேவ்.

மேற்குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Similar News