தமிழக மக்களே இந்த தேதியை மறக்காதீங்க !!
தமிழக மக்களே இந்த தேதியை மறக்காதீங்க !!
தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
பச்சிளம் குழந்தைகள் முதல் 5 வயது குழந்தைகள் வரை வழங்கப்படும் தேசிய போலியா சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ம் தேதி நடைபெறுகிறது. இந்த போலியோ முகாம் கடந்த 17-ம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி காரணமாக, போலியோ சொட்டு மருந்து முகாம் வருகின்ற 31-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
போலியோ இல்லாத பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்றால் அதற்கு போலியோ சொட்டு மருந்துகள் முறையாக வழங்கப்படுவதே காரணமாகும். நமது நாட்டில், அரசாங்கமே முன் வந்து ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைத்து 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்தை அளிக்கிறது.
இந்நிலையில், போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 30ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் தொடங்கி வைக்கிறார்.