மாஸ்க் போடலையா உஷார்..!! இரண்டு மடங்காக உயர்ந்த அபராதம்..!!

மாஸ்க் போடலையா உஷார்..!! இரண்டு மடங்காக உயர்ந்த அபராதம்..!!

Update: 2022-01-13 13:32 GMT

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும், பொதுமக்களில் பலர் பொதுவெளியில் முகக்கவசம் அணியாமல் சென்று வருகின்றனர். இதனால், முகக் கவசம் அணியாமல் செல்பவர்களிடம் இதுவரை 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும், முகக்கவசம் அணியாத நிலையே மக்களிடம் காணப்படுகிறது. எனவே, இனிமேல் பொதுவெளியில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களிடம் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.

Similar News