மக்களே கவனியுங்கள்.. வீதி வீதியாக சென்று மாஸ்க் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர்
மக்களே கவனியுங்கள்.. வீதி வீதியாக சென்று மாஸ்க் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர்
மதுரையில் பொதுமக்களிளிடம் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து நடிகர் வையாபுரி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நடிகர் விவேக் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரால் பயன்பெற்ற சிறு நடிகர்கள் இன்னும் அந்த துயரத்தில் இருந்து மீளவில்லை என்றே கூறலாம். அந்த வகையில் நடிகர் வையாபுரியையும் விவேக்கின் மரணம் பெரும் சோகக்கடலில் தள்ளியுள்ளது.
விவேக் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு சோகத்தில் இருந்தாலும் களத்திற்கு வந்துள்ளார் நடிகர் வையாபுரி. அதாவது, மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சார்பில் கொரோணா பரவல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாட்டுத்தாவணி பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் வையாபுரி பங்கேற்றார்.
பின்னர், அப்பகுதியில் முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டுநர்களை நிறுத்தி அவர்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வையாபுரி எடுத்துரைத்தார். மேலும் அவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களையும் அவர் வழங்கினார்.
அதோடுமட்டுமல்லாமல், பொது இடங்களில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அதை அணிய வேண்டும் என்று வையாபுரி அறிவுறுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
newstm.in