மும்பையில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி !!

மும்பையில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி !!

Update: 2021-04-10 17:55 GMT

இந்தியா முழுவதும் கொரோனா 2வதுஅலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் மும்பையில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக நேற்று பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தடுப்பூசி போட வந்தவர்கள் மூடிய கதவுகளை பார்த்து சோகத்துடன் வீடு திரும்பினர்.

மும்பை மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால்,  நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் பேர் வரை  தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில தலைநகர் மும்பையில் மட்டும் 120 மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி மருந்துகள் எதுவும் கைவசம் இருப்பு  இல்லாததால் பொதுமக்களை சுகாதார ஊழியர்களும், காவல்துறையும் திருப்பி அனுப்பியது.

தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசு, மகாராஷ்டிரா  இடையே ஏற்கனவே வார்த்தை மோதல் ஏற்பட்டு  மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், 5 லட்சம் டோஸ் தடுப்பூசியை வீணடித்ததாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:    

Similar News