திருமண மண்டபத்துக்கு மக்கள் பணம் கட்டிதான் ஆகவேண்டும்.. மத்திய அமைச்சர் பேச்சு !!

திருமண மண்டபத்துக்கு மக்கள் பணம் கட்டிதான் ஆகவேண்டும்.. மத்திய அமைச்சர் பேச்சு !!

Update: 2021-09-17 07:52 GMT

நாட்டில் நல்ல சாலைகள் வேண்டும் என்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்தத் தான் வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. பெரிய திட்டமான இப்பணியை மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஹெலிகாப்டரில் சென்றவாறு பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். 

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலைகளில் சுங்கச்சாவடிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, திருமணத்துக்காக நீங்கள் ஏ.சி. மண்டபத்தைப் பயன்படுத்த விரும்பினால் அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், நீங்கள் பொதுவெளியிலும் திருமணத்தை ஏற்பாடு செய்யலாம். 

அதேபோல் தான் மக்களுக்கு நல்ல சாலைகள் வேண்டுமென்றால் அதற்கு அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும், விரைவுச் சாலையால் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும், இதனால் எரிபொருள் செலவு குறையும். டெல்லி - மும்பை விரைவுச் சாலை பயண நேரத்தை 12 மணி நேரமாக குறைக்கும். ஒரு லாரி டெல்லியில் இருந்து மும்பையை அடைய 48 மணி நேரம் ஆகும். ஆனால் விரைவுச் சாலையில் அது 18 மணிநேரம் மட்டுமே ஆகும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

newstm.in

Tags:    

Similar News